
எம்மதத்தவரும் ஜபம் செய்வதற்கு ஏதாவது ஒருவகை ஜபமாலையை
உபயோகிக்கிறார்கள். ஹிந்துக்கள் ருத்ராக்ஷத் தையோ, துளஸியையோ, ஸ்படிகத்தையோ பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.
'ருத்ராக்ஷ' என்ற சொல்லுக்கு ருத்ரனின் கண்ணீர் என்று பொருள்படும்.
ருத்ராக்ஷம் என்பது அதே பெயர் கொண்ட மரத்தின் காய் தான்.
இது நேபாள தேச மலைகளிலும், ஜாவா
தீவிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில் போலிகளும் கிடைக்கின்றன. ருத்ராக்ஷம் மிக
புனிதத்தன்மை பெற்றது. ருத்ராக்ஷமும், ஸ்படிகமும் சிவ பக்தர்களாலும்,...