Thursday, December 10, 2015

ருத்ராக்ஷ சுவடி

எம்மதத்தவரும் ஜபம் செய்வதற்கு ஏதாவது ஒருவகை ஜபமாலையை உபயோகிக்கிறார்கள். ஹிந்துக்கள் ருத்ராக்ஷத் தையோ, துளஸியையோ, ஸ்படிகத்தையோ பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள்.

'ருத்ராக்ஷ' என்ற சொல்லுக்கு ருத்ரனின் கண்ணீர் என்று பொருள்படும்.
ருத்ராக்ஷம் என்பது அதே பெயர் கொண்ட மரத்தின் காய் தான். இது நேபாள தேச மலைகளிலும், ஜாவா தீவிலும் அதிகமாக காணப்படுகிறது. இதில் போலிகளும் கிடைக்கின்றன. ருத்ராக்ஷம் மிக புனிதத்தன்மை பெற்றது. ருத்ராக்ஷமும், ஸ்படிகமும் சிவ பக்தர்களாலும், துளஸி வைணவர்களாலும் பெரும்பாலும் அணியப்ப்டுகிறது.

ருத்ராக்ஷத்தை பற்றி எனது சிறு தொகுப்பு
டவுன்லோட் செய்ய
To Download & Read Click Here

Wednesday, December 9, 2015

சுந்தரகாண்டம்-இந்திராசௌந்திரராஜன்

சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.



இந்திராசௌந்திரராஜன் எழுதிய எளிமையான சுந்தரகாண்டம் டவுன்லோட் செய்ய 
To Download & Read Click Here

சப்தகன்னியர்கள் வழிபாடு

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், சோழர்களின் கோவில்களிலிலும்  தமிழ் இலக்கியங்களிலும் (கலிங்கத்துப்பரணி) தெரிவிக்கப் பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.


சப்தகன்னியர்களின் வழிபாட்டு முறையையும், அவர்களின் சிறப்பை பற்றியும் இந்த சிறிய நூல் விவரிக்கிறது

சப்தகன்னியர் வழிபாடு டவுன்லோட் செய்ய

To Download & Read Click Here

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது.


பெரும் மதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப் படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது.

சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான ஸ்தோத்ரம் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை.
அர்த்தம் தெரியாமல் எந்த மந்திரமோ ,பாடலோ படிக்கக் கூடாது என்பது எனது கருத்து.அதனால் பொருளுரையுடன் இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தினை தொகுத்து உள்ளேன்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் டவுன்லோட் செய்ய
To Download & Read Click Here

வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்

பதிகம் பற்றி... ஒரு பொருளைப் பற்றி பத்து அல்லது 11 பாடல்களால் பாடுவது பதிகம் எனப்படும். தேவாரத்தில் மட்டும் 11 பாடல்கள் இருக்கும். ஒரு ஊரிலுள்ள சிவனைப் புகழ்ந்து பாடும் தேவார ஆசிரியர்கள், அந்தப் பாடலைப் பாடினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கடைசிப்பாடலில் சொல்லியிருப்பார்கள். குறிப்பாக, சம்பந்தரின் பாடல்கள் அவரது பெயரிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படும் பதிகம்.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர்.
நான் ஆச்சரியப்பட்டு அதனில் என்னை கவர்ந்த பதிகங்களை இந்த சிறிய நூலில் (வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்) தொகுத்து உள்ளேன். 
 வளமுடன் வாழ 20 திருப்பதிகங்கள்
To Download & Read Click Here

Friday, December 4, 2015

மஹாபாரதம்

மஹாபாரதம் டவுன்லோட் செய்ய
To Download & Read Click Here